வேற லெவல் அம்சங்கள்.. ரூ. 899 விலையில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்...!

By Kevin Kaarki  |  First Published May 26, 2022, 3:36 PM IST

புதிய ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் IPX4 ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.


இந்திய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் ரூ. 2 ஆயிரம் விலைப் பிரிவில் ஏராளமான புது மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விலை பிரிவில் போட்டியை மேலும் பலப்படுத்த ஸ்வாட் எனும் ஸ்மார்ட் எலெக்டிரானிக் பிராண்டு இந்திய சந்தையில் ஏர்லிட் 005 (AirLIT 005) பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 

புதிய ஏர்லிட் 005 இயர்பட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள் உள்ளன. பிரத்யேக வடிவம் கொண்டு இருக்கும் புதிய ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்கிறது. இதை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளுக்கு சோர்வு ஏற்படாது.

Tap to resize

Latest Videos

ஸ்வாட் ஏர்லிட் 005 மாடலில் இன் இயர் ரக இயர்பட் மற்றும் சிலிகான் டிப்கள் உள்ளன. இந்த இயர்பட் IPX4 ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல் உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மற்றும் அழைப்புகளை மேற்கொள்வது சவுகரியமாக இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டுள்ளது. 

இதனை சார்ஜ் செய்தால் 5.5 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழஹ்குகிறது. சார்ஜிங் கேஸ்-ஐ சேர்க்கும் போது மொத்தத்தில் 12 மணி நேர பேக்கப் கிடைக்கும். 

ஸ்வாட் ஏர்லிட் 005 அம்சங்கள்:

- 10mm டைனமிக் டிரைவர்கள்
- ப்ளூடூத் 5.0+ EDR
- டச் கண்ட்ரோல்
- வாய்ஸ் அசிஸ்டண்ட்
- IPX4 ஸ்வெட் ரிச்ஸ்டண்ட்
- 40mAh பேட்டரி (ஒவ்வொரு இயர்பட்களிலும்)
- 400mAh சார்ஜிங் கேஸ்
- சார்ஜிங் செய்ய 60 நிமிடங்கள்
- 5.5 மணி நேர பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்த்தால் 12 மணி நேர பிளேபேக்

விலை விவரங்கள்:

ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஸ்வாட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் முன்னணி ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

click me!