Switch to Android: ஐ.ஓ.எஸ். பயனர்கள் தங்களின் தரவுகளை ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டிற்கு பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
2017 ஆண்டு முதல் ஆண்ட்ராய்டில் இருந்து ஐ.ஓ.எஸ்.க்கு தரவுகளை ஸ்விட்ச் செய்ய அனுமதிக்கும் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வருகிறது. இந்த செயலியை ஆப்பிள் ஐபோன்களில் இன்ஸ்டால் செய்து ஆண்ட்ராய்டில் உள்ள தரவுகளை மிக எளிமையாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு:
undefined
தற்போது இதே போன்ற செயலியை கூகுள் வெளியிட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் “மூவ் டு ஐ.ஓ.எஸ்.” (Move to iOS) செயலிக்கு நேர் எதிர் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கூகுள் வெளியிட்டு உள்ளது. இதை கொண்டு ஐ.ஓ.எஸ். பயனர்கள் தங்களின் தரவுகளை ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டிற்கு பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த செயலி “ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு” (Switch to Android) என அழைக்கப்படுகிறது.
தொல்லை இல்லை:
கூகுள் தற்போது அறிமுகம் செய்து இறுக்கும் ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு செயலி கொண்டு பழைய ஐபோனில் உள்ள தரவுகள் அனைத்தையும் மிக எளிமையாக புத்தம் புது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு எவ்வித சிரமும் இன்றி பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த செயலி வெளியாகும் முன்பு வரை ஐ.ஓ.எஸ். பயனர்கள் முதலில் தங்களின் ஐபோன்களை கணினி, எஸ்.டி. கார்டு அல்லது பென் டிரைவுக்கு மாற்றி பின் இவைகளில் இருந்தே ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.
தற்போது பயனர்கள் மூன்றாம் தரப்பு பேக்கப் மென்பொருள்களை நாட வேண்டிய அவசியம் இன்றி தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ஒற்றை செயலி மூலம் மிக எளிமையாக புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு மாற்றிக் கொள்ள முடியும்.
எப்படி இயங்குகிறது:
ஐபோனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், காண்டாக்ட் மற்ரும் காலண்டர் உள்ளிட்டவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுடில் பயனர் அக்கவுண்ட்-இல் சேமிக்கப்பட்டு இருக்கும். ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு செயலி அனைத்து தரவுகளையும் ஐகிளவுட் தளத்தில் இருந்து கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் தளங்களுக்கு மாற்றி விடும். அதன் பின் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கி அதனை செட்டப் செய்யும் போது ஐ.ஓ.எஸ்.-இல் ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு செயலியில் பேக்கப் செய்த தரவுகள் முழுவதுமாக புது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ரி-ஸ்டோர் செய்யப்பட்டு விடும்.
நான்கு ஸ்டெப்ஸ்:
ஐபோனில் இருக்கும் தரவுகளை ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு மாற்ற ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு செயலியில் நான்கு ஸ்டெப்களை பின்பற்றினாலே போதுமானது.
ஸ்டெப் 1 - ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள QR கோடினை முதலில் ஸ்கேன் செய்து பழைய ஐபோனுடன் இணைக்க வேண்டும்.
ஸ்டெப் 2 - புது ஸ்மார்ட்போனிற்கு எந்த தரவுகளை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3 - திரையில் தோன்றும் வழிமுறைகளின் படி பயனர்கள் இப்போது தங்களின் ஐமெசேஜை ஆஃப் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4 - தற்போது பயனர்கள் ஐகிளவுட் டேட்டா அனைத்தும் கூகுள் சர்வர்களுக்கு பேக்கப் செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினாலே புது ஆண்ட்ராய்டு சாதனத்தில் பயனர்கள் தங்களின் பழைய ஐபோன் டேட்டா அனைத்தையும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த செயலி தற்போது சாஃப்ட்லான்ச் முறையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அன்லிஸ்டட் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.