நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்.. திடீரென வெடித்து சிதறிய போன்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 16, 2022, 3:31 PM IST

ஸ்மார்ட்போனில் அழைப்பை பேசி கொண்டிருக்கும் போதே அது திடீரென வெடித்தது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். 


பேட்டரி கோளாறு காரணமாக ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் நடுவானில் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. இண்டிகோ விமானத்தில் டிபுர்காவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தில் தான் இந்த பரபர சம்பவம் அரங்கேறியது. ஸ்மார்ட்போனில் திடீரென தீப்பிடித்த நிலையில், விமான ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இண்டிகோ விமானம் 6E 2037 டிபுர்காவில் இருந்து டெல்லி திரும்பி கொண்டிருந்தது. நடுவானில் பயணி ஒருவரின் போனில் இருந்து புகை வெளியேறி தீப்பிடிக்க தொடங்கியதை விமான ஊழியர் ஒருவர் கவனித்தார். இதனால் தீ அதிகமாகும் முன்னரே விமான ஊழியர்கள் தீயணைப்பான் கொண்டு தீயை அணைத்தனர். அதன்பின் சுமார் 12.45 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

Latest Videos

undefined

விளக்கம்:

"போனின் பேட்டரியில் அதிகளவு வெப்பம் அடைந்ததால் தான் தீப்பிடித்து எரிந்தது என இண்டிகோ தெரிவித்தது. டிபுர்காவில் இருந்து  டெல்லி வந்து கொண்டிருந்த இண்டிகோ 6E 2037  விமானத்தில் ஸ்மார்ட்போன் ஒன்றின் பேட்டரி அளவுக்கு அதிகமாக வெப்பமடைந்தது. அனைத்து விதமான அசம்பாவித சூழல்களில் எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என விமான ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இன் காரணமாகவே ஊழியர்களால் விரைந்து தீயை அணைக்க முடிந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணர்கள் மற்றும் பொருட்கள் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை," என இண்டிகோ தெரிவித்து இருக்கிறது. 

சாம்சங்:

எந்த ஸ்மார்ட்போனில் இந்த அசம்பாவிதம் அரங்கேறியது என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. விமானத்தில் ஸ்மார்ட்போன் மாடல்கள் வெடித்து சிதறம் சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக 2016 வாக்கில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறி இருக்கின்றன. இதே போன்று கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி A21 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்த சம்பம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் அரங்கேறியது.

ஒன்பிளஸ்:

சமீபத்தில் கூட ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் தற்போது சாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகின்றன. கடந்த மாதம் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய சம்பவத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார். ஸ்மார்ட்போனில் அழைப்பை பேசி கொண்டிருக்கும் போதே அது திடீரென வெடித்தது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

click me!