POCO F4 GT: விரைவில் அறிமுகமாகும் புது போக்கோ ஸ்மார்ட்போன்.. என்னென்ன அம்சங்கள் தெரியுமா..?

By Kevin KaarkiFirst Published Apr 16, 2022, 4:17 PM IST
Highlights

POCO F4 GT: போக்கோ F4 GT பெயரில் உருவாகி இருக்கும் புது கேமிங் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

போக்கோ நிறுவனம் ஃபிளாக்‌ஷிப் அம்சங்கள் நிறைந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. போக்கோ F4 GT பெயரில் உருவாகி இருக்கும் புது கேமிங் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை போக்கோ வெளியிட்டு உள்ளது.

புதிய போக்கோ F4 GT ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகி இருக்கிறது. இந்திய நேரப்படி அறிமுக விழா மாலை 5.30 மணிக்கு துவங்க இருக்கிறது. போக்கோ F4 GT ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் புது போக்கோ ஸ்மார்ட்போன் மட்டுமின்றி புதிய AIoT சாதனங்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் போக்கோ கேமிங் ஸ்மார்ட்போன் ரெட்மி K50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50 கேமிங் எடிஷனில் உள்ளதை போன்றே அம்சங்களே போக்கோ F4 GT மாடலில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

போக்கோ F4 GT அம்சங்கள்:

- 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் 
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் 
- அட்ரினோ next-gen GPU
- 8GB LPPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPPDDR5 ரேம், 128GB / 256GB (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- டூயல் சிம் ஸ்லாட் 
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 ஓ.எஸ்.
- 64MP பிரைமரி கேமரா, f/1.65, LED ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2MP டெலிமேக்ரோ கேமரா, f/2.4
- 20MP செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- யு.எஸ்.பி. டைப் சி
- 4700mAh பேட்டரி
- 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

click me!