Suzuki V Strom: இந்த மாடலின் சேசிஸ் ஜிக்சர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் சேசிஸ்-இல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
சுசுகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 250சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள், வி ஸ்டாம் SX மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சுசுகி வி ஸ்டாம் SX மாடல் ஜிக்சர் 250 பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய வி ஸ்டாம் SX மாடலிலும் ஆயில் கூல்டு என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.
சுசுகி வி ஸ்டாம் SX டிசைன்:
புதிய சுசுகி வி ஸ்டாம் SX மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சுசுகி வி ஸ்டாம் 1050 மாடலை தழுவிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பீக் சுசுகி DR-Z ரேசர் மற்றும் DR-BIG ஆஃப் ரோடு மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஆக்டகோனல் எல்.இ.டி. ஹெட்லைட், ஜிக்சர் 250 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் உயரமான விண்ட் ஸ்கிரீன், ஹேண்ட்கார்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் இரட்டை பீஸ் சீட், டூயல் டோன் டெயில் செக்ஷன், இண்கிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட், லக்கேஜ் கரியர் / கிராப் பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் சேம்பியன் எல்லோ 2, பியல் பிளேஸ் ஆரஞ்சு மற்றும் கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
சுசுகி வி ஸ்டாம் SX என்ஜின்:
புதிய சுசுகி வி ஸ்டாம் SX மாடலில் 249சிசி, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் சுசுகி ஜிக்சர் 250 ஸ்டிரீட் நேக்கட் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் சேசிஸ் ஜிக்சர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் சேசிஸ்-இல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சுசுகி வி ஸ்டாம் SX மாடலின் வீல்பேஸ் ஜிக்சர் 250 மாடலில் உள்ளதை விட 100mm அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், 7 ஸ்டெப், பிரீ லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. சுசுகி வி ஸ்டாம் SX எடை 167 கிலோ ஆகும்.
சுசுகி வி ஸ்டாம் SX அம்சங்கள்:
சுசுகி வி ஸ்டாம் SX மாடலில் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் எல்.சி.டி. ஸ்கிரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாட்ஸ்அப் அலெர்ட், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ETA இன்ஃபர்மேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது. இந்திய சந்தையில் புதிய சுசுகி வி ஸ்டாம் SX மாடல் விலை ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய சுசுகி வி ஸ்டாம் SX மாடல் கே.டி.எம். 250 அட்வென்ச்சர், யெஸ்டி அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.