Tata Nexon EV: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV லாங் ரேன்ஜ் மாடலை ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நெக்சான் EV லாங் ரேன்ஜ் மாடலில் 40 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
அதிக ரேன்ஜ்:
undefined
புதிய பேட்டரி பேக் நெக்சான் EV காரின் ரேன்ஜை 400 கிலோமீட்டர்களாக அதிகப்படுத்தும் என தெரிகிறது. புதிய நெக்சான் EV மாடல் தற்போது கிடைக்கும் நெக்சான் EV மாடலுடன் சேர்த்தே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த வகையில் வாடிக்கையாளர்கள் விலை மற்றும் ரேன்ஜ் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ள முடியும்.
கர்வ் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்த கையோடு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் EV மாடலையும் இதே மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இது மட்டுமின்றி ஏப்ரல் 28 ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றொரு அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
அம்சங்கள்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் EV மாடலின் சோதனைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. புதிய நெக்சான் EV மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய நெக்சான் EV மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்களை கொண்டிருக்காது என்றே தெரிகிறது.
புது நெக்சான் EV மாடலின் பெரும் அப்டேட்டாக 40 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மட்டும் தான் இருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. இது தற்போதைய நெக்சான் EV மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை விட 30 மடங்கு பெரிய பேட்டரி ஆகும்.
புதிய மாடல் ரேன்ஜ்:
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா நெக்சான் EV மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. உண்மையில், நம் நாட்டு சாலைகளில் நெக்சான் EV 200 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மேம்பட்ட பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 400-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் புதிய நெக்சான் EV மாடல் அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.
போட்டியாளர்கள்:
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV லாங் ரேன்ஜ் மாடல் ஹூண்டாய் கோனா, எம்.ஜி. ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.