சத்தமின்றி உருவாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்... இணையத்தில் லீக் ஆன சூப்பர் அப்டேட்..!

By Kevin Kaarki  |  First Published Apr 7, 2022, 4:03 PM IST

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் என்ற டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போனின் கேமரா மாட்யூல் செட்டப் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. 


ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்  சீன மைக்ரோ பிளாகிங் வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது. ரெண்டர்களின் படி புதிய ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஒன்பிளஸ் 10 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. முந்தைய ரெண்டர்களில் ரெனோ 8 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தெரியவந்தது. 

மேலும் கேமரா மாட்யூல் செட்டப் வித்தியாசமாக காட்சதியளித்தது. புதிய ஒப்போ ரெனோ 8 சீரிசில் வென்னிலா ஒப்போ ரெனோ 8 மற்றும் பிரீமியம் ஒப்போ ரெனோ 8 ப்ரோ போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படாது என கூறப்படுகிறது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் என்ற டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போனின் கேமரா மாட்யூல் செட்டப் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ஒன்பிளஸ் 10 ப்ரோ ரெஃபரன்ஸ்:

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் செவ்வக கேமரா மாட்யூல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 மாடலில் செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. எனினும், கேமரா சென்சார்கள் இரு மாடல்களிலும் ஒரே மாதிரியாகவே பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ரெண்டர் ஒப்போ ரெனோ 8 சீரிசில் எந்த மாடலுடையது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

கேமரா மாட்யூல் தவிர ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போனில் ஃபிளாட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வடிவமைப்பு உதாரணத்திற்கானது என்பதால், இதன் லென்ஸ் விவரங்கள் பற்றி எந்த தகவலையும் உறுதியாக கணிக்க இயலாது. 

வித்தியாசம்:

முன்னதாக லெட்ஸ் கோ டிஜிட்டல் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்று இருந்த ரெண்டர்கள் ஒப்போ சீனாவில் விண்ணப்பித்து இருந்த காப்புரிமை டிசைன் சார்ந்த பிராடக்ட் படங்கள் என தெரிவித்து இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்ரும் சில்வர் கிரேடியண்ட் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ரெண்டர்கள் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. 

ஒப்போ ரெனோ 8 சீரிஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஒப்போ ரெனோ 8 சீரிஸ் மாடலில் 6.55 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50MP சோனி IMX7666 பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று சென்சார்கள் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

புதிய  ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றி ஒப்போ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். 

click me!