ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முந்தைய பயணம் மே 29, 2023 அன்று நடந்தது. அப்போது அந்த ராக்கெட்டுக்கு GSLV-F12 என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன்படி, அடுத்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு 'GSLV-F13' என இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக 'GSLV-F14' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வானிலை செயற்கைக்கோள் INSAT-3DS சனிக்கிழமை மாலை விண்ணில் பறக்கத் தயாராக இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் GSLV-F14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும்.
இந்நிலையில், இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்கு பெயர் வைக்கும்போது எண் 13ஐத் தவிர்த்திருப்பது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது. எண் 13 பொதுவாக துரதிர்ஷ்டவசமான எண் என்று கருதப்படுகிறது. இதனால்தான் ராக்கெட் பெயரில் அந்த எண் தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முந்தைய பயணம் மே 29, 2023 அன்று நடந்தது. அப்போது அந்த ராக்கெட்டுக்கு GSLV-F12 என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன்படி, அடுத்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு 'GSLV-F13' என இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக 'GSLV-F14' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வானிலை செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. எப் 14 ராக்கெட்
பிஎஸ்எல்வி ராக்கெட் விஷயத்திலும் இதே போல நடந்துள்ளது. அப்போதும் இஸ்ரோ 12க்குப் பிறகு 13ஐ தவிர்த்து 14 என்ற எண்ணையே பயன்படுத்தியது. PSLV-C12 ராக்கெட்டை அனுப்பிய பிறகு, இஸ்ரோ தனது அடுத்த பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு 'PSLV-C14' என்று பெயரிட்டது.
இது குறித்து இஸ்ரோ தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் கூறப்படவில்லை. ஆனால், "13 என்ற எண்ணைக் கொண்ட ராக்கெட் எதுவும் இல்லை" என்று ஒரு உயர் அதிகாரி கூறியிருக்கிறார். அதே நேரத்தில் இஸ்ரோ 13 என்ற எண்ணை துரதிர்ஷ்டவசமானதாகக் கருதுகிறதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய அப்பல்லோ-13 சந்திரனில் தரையிறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. அதிலிருந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வேறு எந்த விண்வெளிப் பயணத்திற்கும் 13 என்ற எண்ணுடன் பெயரிடவில்லை.
ஒன்பிளஸ் 11R மொபைலுக்கு பெஸ்டு டீல்! ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இவ்ளோ கம்மியா கிடைக்காது!