பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்தவர் . விஞ்ஞான உலகத்தில் இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவருக்கு வயது 75.
இதற்கு முன்னதாக மிக பெரிய எச்சரிக்கை கொடுத்திருந்தார் ஸ்டீபன் ஹாக்கிங், அதாவது அண்டை கிரகங்களில் வாழ்வதாக கருதப்படும் ஏலியன்ஸ், புவியுடன் தொடர்பை எற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும், அதிக வலிமை மிக்கதாக ஏலியன்ஸ் இருந்தால் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார் .
இந்நிலையில் தற்போது, வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதில் 1௦ பேர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அவ்வாறு பயணம் மேற்கொள்பவர்களில், முக்கிய நபராக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிரபல தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
undefined
இது குறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வாய்ப்பு அளித்த வெர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்டு பிரான்சன் அவர்களுக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்