கிராமப் புற வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், முதன் முறையாக ஒரு புது செயலியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
Mera I phone என்ற செயலியானது, ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி மற்ற வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் விதமாக இந்த செயலி தயார் செய்யப்பட்டுள்ளது .
பயன்கள்
இந்த சேயை மூலம் விவசாய பெருமக்கள் தங்களுக்குண்டான, வேளாண்மை குறித்த தகவல்கள் , வானிலை ஆய்வு அறிக்கை உள்ளிட்ட பல தகவல்கள் இந்த செயலின் மூலமாகவே தெரிந்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது .
undefined
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப, கிராமபுறம் சார்ந்த 7௦௦ ஐசிஐசிஐ கிளைகளில் வைபை பயன்பாடு குறித்தும், எவ்வாறு வைபை பயன்படுத்துவது என்பது பற்றியும் கிராம மக்களிடேயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி மூலம், கிரெடிட் கார்ட், தங்க கடன் வாங்கும் அட்டை, மகளிர் சுய உதவிக் குழு கடன் போன்றவற்றை எளிதில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.