23 ஆம் தேதி முதல் "சூப்பர் மேரியோ".....இனி எப்பொழுதும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன்  தான்...

 
Published : Mar 20, 2017, 09:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
23 ஆம் தேதி முதல் "சூப்பர் மேரியோ".....இனி எப்பொழுதும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன்  தான்...

சுருக்கம்

23rd onwards super mario game on ur smart phones

 தொழில்நுட்ப வளர்ச்சி  என்பது ஒன்றல்ல  இரண்டல்ல ஒட்டுமொத்த துறையிலும்  விஞ்ஞானம்  வளர்ந்துவிட்டது .

அதற்கு எடுத்துக்காட்டாக பல  துறைகள் இருந்தாலும், தற்போது வீடியோ கேம்ஸ் எந்த அளவிற்கு மக்களின்  மனதை  கொள்ளை  அடித்துள்ளது என்பதற்கு  சான்று  நாள்தோறும்  அறிமுகமாகும்  வீடியோ கேம்ஸ்  தான் .

அதன்படி,  வரும் 23 ஆம் தேதி  முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் சூப்பர்  வீடியோ கேம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என  தகவல்  வெளியாகி  உள்ளது .

இதற்கு முன்னதாக வீடியோ  கேம்ஸ்   வரலாற்றில்  ‘சூப்பர் மேரியோ கேம்’  என்றாலே  தனி சிறப்பு தான் .

இதனை தாண்டி  தற்போது பல  வீடியோ கேம்ஸ் இருந்தாலும்,வீடியோ  கேம்ஸ்  பிரியர்களின்  ஆழ்மனதில் இருக்கும்  சூப்பர் மேரியோ கேமை, புதுமையாக  ஸ்மார்ட் போன்களில் விளையாட  வழிவகை  செய்யப்பட்டுள்ளது .

அமெரிக்காவின் நிண்டெண்டோ என்ற நிறுவனம், கடந்த  3 மாதங்களுக்கு  முன்பாக தான் ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இயங்கும் வகையில்  இந்த கேமை  அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் விளையாடும் வகையில் தற்போது சூப்பர் மேரியோ விளையாட்டில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

இந்த  விளையாட்டை  இலவசமாக டவுன் லோட்  செய்து  கொள்ள முடியும்  . ஆனால் விளையாட்டின்  அடுத்த பகுதிக்கு செல்லும் போது கட்டணம்  செலுத்த  வேண்டும்  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது சூப்பர் மேரியோ மக்களின்  மனதில்  மீண்டும் ஒரு தனி இடம்  பிடித்துள்ளது என்றே கூறலாம் .

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஐடி (IT) வேலைக்கு குட் பை.. வெல்டிங், பிளம்பிங் வேலைக்கு மவுசு! ஜென் ஜி இளைஞர்களின் புது ட்ரெண்ட்!
அம்பானி vs அதானி: டிகிரி முக்கியமா? அனுபவம் முக்கியமா? இந்தியாவின் டாப் 2 பணக்காரர்கள் படித்தது என்ன?