நெதர்லாந்து நாட்டில் உள்ள இந்தோவன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் வைபை விட 1௦௦ மடங்கு அதிகமாக இயங்கக் கூடிய வைபை சேவையை கண்டுபிடித்துள்ளனர் .
அதாவது நாம் எங்கு சென்றாலும் வைபை இணைப்பு இருக்கிறதா என்பதை கேட்போம். அந்த அளவுக்கு இண்டர்நெட் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதே வேளையில் ஒரே வைபை இணைப்பை பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பலரும் பயன்படுத்தினால் அதனுடைய வேகம் வெகுவாக குறைந்து விடும் .
இதற்கெல்லாம் தீர்வு காணும் நோக்கில் ஆய்வில் இறங்கியது நேதார்லாந்து இந்தோவன் பல்கலைக் கழகம் .இந்தக ஆய்வில், அகசிவப்பு கதிர்களை பயன்படுத்தி, இணைய இணைப்பினை வேகமாகவும் தங்கு தடையின்றியும் பண்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி வைபை பயன்படுத்தும் போது, இதற்காக பிரத்யேக ஒளிக்கற்றைகள் பயன்படுத்தப்படும் என்பதால் இணைய இணைப்பில் இனி வேகம் குறையாது என தெரிய வந்துள்ளது