
ஜியோ அறிவித்த அதிரடி சலுகைக்கு பின், போட்டியை சமாளிக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகையை வழங்க தொடங்கியது . தற்போது ஐடியா செல்லுலார் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டும் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களுக்கு ஒரே கட்டணத்தில் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போது அமல் ?
வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு இந்த திட்டம் பொருந்தும். அதாவது 2ஜி சேவையைக்கு பெறப்படும் கட்டணத்திற்கு நிகராக, அதே கட்டணத்தில் 4ஜி சேவை வழங்கப்படுகிறது
தற்போது, ஐடியா நெட்வொர்க்கில் 1 ஜிபி 2ஜி டேட்டா ரூ.170க்கு வழங்கப்படுகிறது, ஆனால் தற்போது 4ஜி டேட்டாவுக்கு ரூ.123 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.