
பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களில், முன்னணி நிறுவனமான ஐடியா, வோடபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துசெயல்பட உள்ளது .இதற்கான ஒப்புதலும் தற்போது பெற்று விட்டதாக ஐடியா நிறுவனத்தின் இயக்குனர் வட்டாரம் தெரிவித்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது .
ஐடியா மற்றும் வோடபோன் இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களாக 4 கோடி பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் சமீபகாலமாக ஜியோ தொடர்ந்து பல சலுகையை வாரி வழங்கி வருவதால் தான் , தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து , போட்டியை சமாளிக்க வோடபோன் மற்றும் ஐடியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
வோடபோன் மற்றும் ஐடியா சமீபத்தில் கூட, பல அதிரடி சலுகைகளை அறிவித்து இருந்தது . இந்நிலையில் இவ்விரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைவதால் மேலும் பல சிறப்பு சலுகை வெளியாக உள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.