இன்டர்நெட் இருந்தாலே போதும்,நம் மக்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் நேரம் காலம் பார்க்காமல், சலிக்காமல் பார்ப்பார்கள்.
அதுவும் ஒரே நேரத்தில் எத்தனை டேப் வேண்டுமென்றாலும் ஓபன் செய்து வைத்துக் கொண்டு பார்ப்பவர்களும் உண்டு . அவ்வாறு பார்க்கும் போது கூகுள் குரோம் இன்டர்நெட் ப்ரவுசரில் 100 அல்லது அதற்கு அதிகமான ரகசிய டேப்களைத் திறந்தால் கண் அடிப்பது போன்ற ஸ்மைலி குறியீடு தோன்றுகிறது.
எப்படி சாத்தியம் ..?
ப்ரவுசர்களில்,நாம் பார்க்கும் வெப்சைட் விவரம் கூகிள் ஹிஸ்டரியில் பதிவாகாமல் இருக்க, ஒரு ரகசிய டேப் வசதி உள்ளது.இந்த டேப் அதிகமான முறையில் ஓபன் செய்தால், அதாவது 99 முறை கடந்து 3 இலக்க எண்ணை அடைந்தால் (1௦௦) , ஆண்ட்ராய்ட் போனுக்கான குரோம் ப்ரவுசரில் கண் அடிப்பது போன்ற ஸ்மைலி குறியீடு தோன்றுகிறது. இதன் மூலம் ஒருவர் எத்தனை முறை ரகசிய டேப்களை ஓபன் செய்துள்ளனர் என்பதை சுலபமாக கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .