சாராஹா பேஸ்புக் தளத்தில் அதுவும் நம்முடைய டைம்லைனின் அடிக்கடி பார்க்கக் கூடிய ஒரு ஆப்ஸ் எனக்கூறலாம்.
சாராஹா என்பதன் பொருள் நேர்மை.அதாவது நாம் பணிபுரியும் அலுவலகத்திலோ அல்லது ஒருசில முக்கிய நபரிடமோ நம்முடைய கருத்தை தெரிவிக்க, பயன்படுத்தும் ஒரு சாதனமாகதான் சாராஹா விளங்கியது.
ஒருவருக்கு உண்டான பிரச்சனை அல்லது அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை மறைமுகமாக தலைமை அலுவலர்களுக்கு தெரியப்படுத்தவும் தான் உருவாக்கப்பட்டது.மேலும் யாரேனும் தவறு செய்திருந்தாலும், அவர்களுக்கு புரிய வைக்க ஒரு சாதகமாக பயன்படுத்தப்பட்டது தான் சாராஹா.
இந்தியாவில் சாராஹா
undefined
வெளிநாடுகளில் நேர்மையான முறையில் பயன்படுத்தி வந்த இந்த சாராஹாவை தற்போது இந்தியாவில் வேறுவிதமாக பயன்படுத்துகின்றனர். அதுவும் சாராஹாவை பயன்படுத்தும் பெண்களிடம் சில அசிங்கமான கேள்விகளை கேட்கின்றனர்.
அதற்கும் சில பெண்கள் பதிலளிக்கும் விதமாகவும், சில பெண்கள் திட்டியும் பதிலளித்து, பேஸ்புக் டைம்லைனில் பதிவிடுகிறார்கள். இதனால் நம்முடைய நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நம் மீது இருக்கும் மரியாதை சில சமயத்தில் குறைந்துவிடும். அதுமட்டுமில்லாமல் சில பெண்கள் இதுபோன்ற காரணங்களால் மன நிம்மதியை இழப்பர்.
அதற்காக ஆண்கள் மட்டும் இந்த ஆப்ஸ் பயன்படுத்தலாமா என கேள்விகள் கேட்டால் அதற்கு பதில், சாக்கடையில் விழுந்த தங்கம் பெரிதா அல்லது வைரம் பெரிதா என்பதே. வைரம் தானே.......