இன்டர்நெட் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது தான். அந்த இன்டெர்நெட் பயன்பாடு என்பது வேலை நிமித்தமாக இருந்தால் சரி தான் . ஆனால் இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என்ன செய்கிறார்கள்?
தங்களுடைய பெரும்பாலான நேரங்களை சமூக வலைத்தளங்களிலேயே செலவழிகின்றனர்.
அதிலும் குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் என இருந்ததை காட்டிலும். தற்போது வெகு வேகமாக பரவி வரும் SARAHAH என்ற ஆப்ஸ், பேஸ்புக் பக்கத்தில் அதிகளவில் உலா வர தொடங்கி உள்ளது.
பயன்பாடு எப்படி ?
அதாவது இந்த ஆப்ஸ் டவுன்லோட் செய்து, யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்ட் கொடுத்தால் , நமக்கென்ன தனியான ஒரு கணக்கு தொடங்கப்படுது. பின்னர் அந்த லிங்க் ஐ அப்படியே காபி செய்து , பேஸ்புக்கில் பதிவிட்டால், அதில் இருக்கும் நண்பர்கள் கூட்டம் அதனை கிளிக் செய்து, மனதில் தோன்றும் அத்தனையும் டைப் செய்து , மெசேஜ் போன்று அனுப்புவார்கள்.
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், யாரையாவது திட்ட வேண்டுமென்றாலும் சரி, கிண்டல் செய்வது முதல் லவ் சொல்வது வரை அனைத்தும் அனுப்பப்படுகிறது.
ஆனால் இந்த ஆப்ஸ் மூலம் மெசேஜ் அனுப்பினால் யார் அனுப்புகிறார்கள் என கண்டுப்பிடிக்கவே முடியாது. அதாவது கண்ணாமூச்சி ஆட்டம் போல.
இதில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்தாலும், பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை அடிக்கடி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவதால், அவர்கள் மனம் திசை திரும்ப வாய்ப்பு உள்ளது. படிக்கும் எண்ணம் சிதறும், வேலையில் தொய்வு ஏற்படலாம்.
எனவே, படித்த முட்டாள்கள் போல் நாம் இல்லாமல், எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கையில் நிம்மதியாக இருக்க வழி தேடுவோம்