ஜியோ மேலும் ஒரு புரட்சியை உருவாக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ. ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
நேற்று முன்தினம் கூட,ஜியோ பைபர் நெட் சேவையை வெறும் 5௦௦ ரூபாய்க்கு 100 ஜிபி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
நேற்று, INDIA KA SMARTPHONE (JIO PHONE ) அறிமுகமானது. அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.
ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE ))
ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 22 முதல் முன்பதிவு செய்யலாம் என இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்