
ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது ஜியோ.
அதாவது, டேட்டா சேவையில் ஒரு மாபெரும் புரட்சியையே உருவாக்கிய ஜியோ தற்போது ஜியோ பைபர் நெட்சேவையை வழங்க உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ என்பது கூடுதல் தகவல்.
திட்டம் விவரம் :
இந்த சிறப்பு திட்டத்தின் படி, வெறும் ரூபாய் 5௦௦-கு,1௦௦ ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.1 gbps வேகத்தில் சேவையை வழங்க உள்ள ஜியோ கண்டிப்பாக மக்களிடேயே மீண்டும் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த திட்டமானது ஆரம்பத்தில் 1௦௦ முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.