
ரிலைன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோவின் அடுத்தகட்ட முயற்சியாக லேண்ட்லைன் சேவைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது’ என அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2G சேவைகளைவிட 4G சேவைகளை அதிகமாக்குவதை ஜியோ நிறுவனம் இலக்காகக்கொண்டு செயல்படுவதாகவும், இந்தியாவின் மக்கள்தொகையில் 99 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜியோ செயல்படுவதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் அடுத்தகட்ட வெளியீடாக ஜியோ 4G மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைலை தொலைக்காட்சியுடன் இணைத்து, மொபைலில் இருக்கும் தகவல்களைத் தொலைக்காட்சியில் பார்க்க உதவும் கேபிளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து பேசிய முகேஷ் அம்பானி, 'ஜியோவின் அடுத்தகட்ட முயற்சியாக, வீடுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் லேண்ட்லைன் சேவை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்' என்று அவர் கூறினார். இந்த அறிவிப்பால், ஜியோ லேண்ட்லைன் சேவைகள் மூலம், குறைந்த விலையில் இணையச் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.