இன்டர்நெட் வசதிக்கு, இனி மோடம் தேவையில்லை என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் வசதி வைத்திருப்பவர்கள் மோடம், தொலைபேசி என இரண்டு வசதிகளையும் தனித்தனியாக பயன்படுத்தி வந்தனர்.
இனி, தொலைபேசியிலேயே இன்டர்நெட் வசதியையும் பெறலாம் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. தனியார் தொலைபேசி நிறுவனங்களின் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளை, வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் 23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்டன்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்தப்பட உள்ளன.
இதனால், வீடியோ காலிங், கான்ஃபரன்சிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
இதற்காக இன்டர்நெட் புரோட்டோக்ல் வசதி கொண்ட தொலைபேசி கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனால், லேண்ட்லைனுக்கு வரும் அழைப்புகளைத் தொலைபேசியிலும், தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைன் வழியிலும் பேச முடியும்.
வாட்ஸ் அப்பில் உள்ளதுபோல் குழுக்களை ஏற்படுத்தி, தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன. இந்த வசதிகள் யாவும் ப்ரீபெய்டு சேவை வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.-ன் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.