Samsung : பெரிய பட்ஜெட்டில் தரமான போன்.. விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy S24 FE - உத்தேச விலை & ஸ்பெக்!

By Ansgar R  |  First Published Apr 5, 2024, 5:25 PM IST

Samsung Galaxy S24 FE : ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாகவே சாம்சங் தனது புதிய போனை வெளியிடவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Samsung நிறுவனம் தனது Galaxy S23 FE போனை கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அதன் வரிசையில் ​Galaxy S24 FE என்ற போனை, எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக சாம்சங் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy S24 FE ஆனது டோன்-டவுன் பதிப்பாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Galaxy S24 FE வருகின்ற ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்கு இடையிலான காலகட்டத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு ஆக்டோபரில் வெளியான Galaxy S23 FE வெளியீட்டை விட முந்தையதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சாம்சங் நிறுவனம் தனது Galaxy Ring, Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6, Galaxy Watch 7 வரிசை மற்றும் பலவற்றை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

POCO Phone : இன்று முதல் இந்திய சந்தையில்.. பட்ஜெட் விலையில் களமிறங்கும் Poco X6 Neo - விலை & ஸ்பெக் இதோ!

Galaxy S24 FE ஆனது 6.1-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைப் பெறும் மற்றும் சந்தையைப் பொறுத்து Exynos 2400 SoC அல்லது Snapdragon 8 Gen 3 SoCல் இயங்கும். இது 12ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் கொண்டதாகவும், 128ஜிபி மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பக விருப்பங்களில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது 4,500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல சாம்சங் நிறுவனம் தனது Galaxy S23 FE மடலை இந்திய சந்தையில் சுமார் 54,000 என்ற விலையில் விற்பனை செய்து வந்த நிலையில், வரவிருக்கும் இந்த புதிய மாடலை சாம்சங் நிறுவனம் 60,000 என்ற விலையில் விற்பனை செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல பேஸ்புக்கில் புதிய வீடியோ பிளேயர் அப்டேட்!

click me!