மலேசியாவின் கோலாலம்பூரில் இக்கும்போது இந்த மோசடி பற்றி அறிந்த மகன் நிகில், தனது தந்தைக்கு உதவுமாறு டெல்லி காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார். மோசடி எப்படி நடந்தது என்று விவரித்து வீடியோ பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆன்லைன் மோசடியின் வழக்கில், ஒரு முதியவர் ரூ 3 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார். அவர் ஆர்டர் செய்திருந்த உணவு கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்திருந்த அவர், உதவிக்காக ஸ்விக்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்க முயன்றபோது மோசடியில் சிக்கி பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.
இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவரின் மகன் நிகில் சாவ்லா ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். நிகில் சாவ்லாவின் தந்தை ஸ்விக்கியிடம் உணவு ஆர்டர் செய்தார். ஆனால் அது சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படாததால், அவர் விரக்தியடைந்து ஸ்விக்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு விசாரிக்க முடிவு செய்தார்.
undefined
கூகுளில் அதற்கான தொடர்பு எண்ணைத் தேடினார். கூகுள் தேடல் முடிவுகளில் "ஸ்விக்கி கால் சென்டர்" என்ற பெயருடன் பல எண்கள் காட்டப்பட்டன. நிகிலின் தந்தை அவற்றில் ஒரு எண்ணை அழைத்துள்ளார். போனில் பேசியவருடன் முதல் பரிவர்த்தனையில் முதியவரின் கணக்கில் இருந்து ரூ.35,000 பறிபோனது.
35,000 ரூபாய் பணத்தை இழந்ததுவிட்டதைப் புரிந்துகொண்ட முதியவர், பணத்தை திரும்பப் பெறுவதற்காக மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தார். அப்போது, கிரெடிட் கார்டு விவரங்களை கூறவேண்டும் என்று சொல்லி மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டார்.
லோன் எடுத்து கார் வாங்கப் போறீங்களா? என்னென்ன செலவு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு முடிவு பண்ணுங்க!
மோசடி செய்பவர்கள் முதியவரின் சிம் கார்டை நகலெடுத்து, அவரிடமிருந்து விவரங்களைப் பெற தொலைபேசியை குளோன் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் அபகறித்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இக்கும்போது இந்த மோசடி பற்றி அறிந்த மகன் நிகில், தனது தந்தைக்கு உதவுமாறு டெல்லி காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார். மோசடி எப்படி நடந்தது என்று விவரித்து வீடியோ பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட எண ஸ்விக்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்கள் கூகுள் தேடலில் கண்டறியும் எண்களை நம்பிவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் வழங்கப்பட்ட தகவல்கள் மூலம் தொடர்புகொள்ள வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் டெஸ்லா தொழிற்சாலை... விரைவில் ஆய்வு செய்ய வருகிறது எலான் மஸ்க் குழு!