அங்கீகரிக்கப்படாத நெட்வொர்க் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் அபாயத்தைக் குறைக்கலாம். குறிப்பாக பாதுகாப்பற்ற பொது வைஃபை நெட்வொர்க்குகளைத் தவிர்க்க வேண்டும். 2FA எனப்படும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் ஆப் ஸ்டோர் தவிர மற்ற தளத்தில் இருந்து அப்ளிகேஷன்களை ட்வுன்லோட் செய்யக்கூடாது.
ஆப்பிளின் ஐபோன்கள், மேக்புக்ஸ், ஐபாட்கள் மற்றும் விஷன் ப்ரோ ஹெட்செட்களைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்புக்காக இந்திய கணினி அவசரநிலைப் செயல்பாட்டுக் குழு (CERT-In) ஹை-ரிஸ்க்' எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகளில் "ரிமோட் கோட் எக்ஸிகியூஷன்" தொடர்பாக அடையாளம் காணப்பட்ட முக்கியமான குறைபாடு பாதிப்பை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
17.4.1 க்கு முந்தைய Apple Safari அப்ளிகேஷன், 13.6.6 க்கு முந்தைய Apple macOS Ventura, 14.4.1 க்கு முந்தைய Apple macOS Sonoma, 1.1.1 க்கு முந்தைய Apple visionOS ஆகிய பல்வேறு ஆப்பிள் மென்பொருள் மற்றும் வன்பொருள் இதனால் பாதிக்கப்படும். 17.4.1க்கு முந்தைய Apple iOS மற்றும் iPadOS 16.7.7க்கு முந்தைய Apple iOS மற்றும் iPadOS ஆகியவற்றுக்கு இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த பிரச்சினை ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு முக்கியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது தொலை தூரத்தில் இருந்தே ஆப்பிள் சாதனங்களை தன்னிச்சையாக இயக்க அனுமதிக்கிறது. WebRTC மற்றும் CoreMedia இல் உருவாகும் சிக்கலைப் பயன்படுத்தி, சாதனங்களை தொலைவிலிருந்து கையாள உதவுகிறது.
iPhone XS, iPad Pro 12.9-inch, iPad Pro 10.5-inch, iPad Pro 11-inch, iPad Air, iPad மற்றும் iPad mini ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் 17.4.1.க்கு முந்தைய iOS மற்றும் iPadOS கொண்ட சாதனங்களை வைத்திருந்தால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
iPhone 8, iPhone 8 Plus, iPhone X, iPad 5ஆம் தலைமுறை, iPad Pro 9.7 இன்ச் மற்றும் iPad Pro 12.9 இன்ச் முதல் தலைமுறை சாதனங்களை பயன்படுத்துபவர்கள் iOS மற்றும் iPadOS ஐ 16.7.7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளுக்கு அப்டேட் செய்துகொள்ளாவிட்டால் ஆபத்தை எதிர்க்கொள்ளவார்கள்.
அங்கீகரிக்கப்படாத நெட்வொர்க் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் அபாயத்தைக் குறைக்கலாம். குறிப்பாக பாதுகாப்பற்ற பொது வைஃபை நெட்வொர்க்குகளைத் தவிர்க்க வேண்டும். 2FA எனப்படும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் ஆப் ஸ்டோர் தவிர மற்ற தளத்தில் இருந்து அப்ளிகேஷன்களை ட்வுன்லோட் செய்யக்கூடாது.