கூகுள் நிறுவனம் ஜிமெயில் மூலம் மொத்தமாக ஈமெயில் அனுப்புபவர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை விதித்துள்ளது. இந்த விதிகள் இன்று (ஏப்ரல் 1, 2024) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1, 2004 அன்று, கூகுள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை அறிமுகப்படுத்தியது. ஜிமெயில் விரைவில் மின்னஞ்சல் சேவையில் முதலிடத்திற்கு வந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிமெயில் சேவை 1.2 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.
இது குறித்து ஜிமெயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கூகுள் பயனருக்கு மின்னஞ்சல் அனுப்புவதில் சிக்கல் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. மற்ற இலவச வெப்மெயில் சேவைகளைப் போல் இல்லாமல், குறிப்பிட்ட மின்னஞ்சலைக் கண்டுபிடிக்க சிரமப்பட கூடாது என்ற நோக்கில் ஜிமெயில் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் தெரிவித்துள்ளார்.
undefined
மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துவோர் அதிகம் பயன்படுத்தும் தளமாக ஜிமெயில் உருவானதை அடுத்து, பல பயனர்கள் தங்கள் தேவையற்ற மெயில்கள் அதிகமான எண்ணிக்கையில் வருவதாகப் புகார் கூறியுள்ளனர். அவை பெரும்பாலும் மார்க்கெட்டிங் செய்திகள், செய்திமடல் மற்றும் ஸ்பேம்களாக இருக்கின்றன.
எல்லாருமே எலக்ட்ரிக் கார் வாங்கலாம்! கம்மி விலையில் களமிறங்கும் மாருதி சுசுகி eVX!
இதைக் கருத்தில் கொண்ட கூகுள் நிறுவனம் ஜிமெயில் மூலம் மொத்தமாக ஈமெயில் அனுப்புபவர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை விதித்துள்ளது. இந்த விதிகள் இன்று (ஏப்ரல் 1, 2024) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்கள் மின்னஞ்சல்களை மொத்தமாக அனுப்ப விரும்பினால் அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஃபோர்ப்ஸின் அறிக்கை பரிந்துரை செய்கிறது. அதற்கு இணங்க 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 5,000 ஈமெயில்களை அனுப்பும் ஜிமெயில் கணக்குகளை மொத்தமாக அனுப்புபவர்கள் என்று கூகுள் வரையறுக்கிறது.
புதிய கட்டுப்பாட்ட்டின்படி அங்கீகாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால், மொத்தமாக அனுப்புபவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை புதிய விதிகள் நிராகரிக்கும். மார்க்கெட்டிங் ஈமெயில்கள் ஒருமுறை 5,000 என்ற வரம்பை எட்டிவிட்டால், அவர்கள் நிரந்தரமாக 'மொத்தமாக அனுப்புபவர்கள்' என்று வகைப்படுத்தப்படுவார்கள்.
பல சப்-டொமைன்களில் இருந்து மின்னஞ்சல்களை அனுப்பினாலும் இந்த புதிய விதிகள் பொருந்தும் என்பதை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய விதிகளின்படி, சப்-டொமைன்களில் இருந்து அனுப்பும் அனைத்து ஈமெயில்களும் ஒரே முதன்மை டொமைனில் இருந்து அனுப்பியதாகவே கணக்கிடப்படும்.
உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று போன் பேசினால் மொபைல் வழியாக மின்சாரம் பாயுமா?