Redmi Phone : அட்டகாசமான லுக் & ஸ்பெக்.. ஆனா விலை 10,000க்கும் கீழ் - விரைவில் இந்திய சந்தையில் Redmi A3x?

By Ansgar R  |  First Published Apr 1, 2024, 3:32 PM IST

Redmi A3X Launch In India : பிரபல ரெட்மி நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது அது குறித்து இந்த பதிவில் காணலாம்.


Redmi A3x விரைவில் இந்தியாவிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்த கைபேசியின் பெயர் மற்றும் அதன் வெளியீட்டை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் இன்னும் ரெட்மி வெளியிடவில்லை. இது இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi A3ன் ரீபேட்ஜ் (Rebadge) செய்யப்பட்ட பதிப்பாக இது இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

Rebadge என்றால் என்ன? (செல் போனிகளை பொறுத்தவரை)

Tap to resize

Latest Videos

ஏற்கனவே வெளியான ஒரு போனை, சிறு மாற்றங்களுடன் வேறு பெயர் அல்லது வேறு ஒரு பிராண்ட் மூலம் விற்பனைக்கு கொண்டுவருவதே Rebadge அல்லது Rebadging என்று அழைக்கப்படுகிறது 

Poco Phone.. இணையத்தில் லீக்கான Poco F6 போன் பற்றிய தகவல்.. இந்தியாவில் எப்போ வெளியாகும்? முழு விவரம்!

இதற்கு முன் வெளியான Redmi A3 ஆனது இந்தியாவில் ஆக்டா-கோர் MediaTek Helio G36 SoC, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 6.71-இன்ச் 90Hz HD+ (1,600 x 700 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, AI ஆதரவு கொண்ட இரட்டை 8-மெகாபிக்சல் கேமரா யூனிட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அந்த கைபேசியானது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ரெட்மி A3X மாடலும் இதே வகை ஸ்பெக்குடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உருவ அமைப்பிலும் பெரிய அளவில் இந்த போனில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Redmi A3ஐ பொறுத்தவரை மிட்நைட் பிளாக், லேக் ப்ளூ மற்றும் ஆலிவ் கிரீன் வண்ண விருப்பங்களில் வழங்கப்பட்டது. 

ஆகையால் இந்த புதிய போனும் இதே வண்ண விருப்பங்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல Redmi A3, இந்தியாவில்3 ஜிபி RAM + 64 ஜிபி ROM மாடல் 7,29 ரூபாய்க்கும், அதே நேரத்தில் 4 ஜிபி RAM + 128 ஜிபி ROM மற்றும் 6 ஜிபி RAM + 128 ஜிபி RAM மாடல்கள் முறையே 8,299 மற்றும் 9,299 ரூபாய்க்கு விற்பனையானது. ஆகையால் வரவிருக்கும் இந்த போனும் 10,000 என்ற செக்மென்ட்டிற்குள் தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Upcoming Mobile: இப்போ போன் வாங்க போறீங்களா.. வெயிட் பண்ணுங்க.. 5 ஸ்மார்ட்போன் வரப்போகுது..

click me!