Poco Phone.. இணையத்தில் லீக்கான Poco F6 போன் பற்றிய தகவல்.. இந்தியாவில் எப்போ வெளியாகும்? முழு விவரம்!

By Ansgar R  |  First Published Mar 30, 2024, 7:00 PM IST

Poco F6 Specs : பிரபல ரெட்மி நிறுவனம் தனது Redmi Note 13 Pro Turbo என்ற போனை விரைவில் உலக சந்தையில் Poco F6 என்ற பெயரில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் Note 13 தொடரில், மிகவும் சக்திவாய்ந்த கைபேசியாக கருதப்படும் Redmi Note 13 Turboன் (Poco f6) விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளன. குவால்காம் சமீபத்தில் அறிவித்த ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட்டு இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மற்றும் 120Hz Refresh Rate விகிதத்துடன் OLED திரையைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போனின் வெளியீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை நிறுவனத்திடமிருந்து எந்தவித தாகவும் இல்லை என்றே கூறலாம். மேலும் இந்த கைபேசி அதற்கு முன்னதாக வெளியான சில போன்களை போலவே சீனாவுக்கு வெளியே போகோ-பிராண்டட் தொலைபேசியாக அறிமுகமாகலாம் என்றும் தற்போது வெளியான தகவல்கள் கூறுகின்றது.

Tap to resize

Latest Videos

பட்ஜெட்டில் அடங்கும் விலை.. Realme 12X 5G வந்தாச்சு.. இந்திய சந்தையில் எப்போ வெளியாகும்? விலை & ஸ்பெக் இதோ!

இணையத்தில் கசிந்த விவரங்களின்படி, Redmi Note 13 Turbo ஆனது 120Hz Refresh Rate விகிதத்துடன் ஒரு பிளாட் 1.5K OLED திரையைக் கொண்டிருக்கும். இதன் டிஸ்பிளே இரண்டு சப்ளையர்களால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது - TCL Huaxing மற்றும் Shenzhen Tianma ஆகிய நிறுவனங்கள் தான் அவை. 90W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை இந்த போன் கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 13 Turbo ஆனது Sony IMX882 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பின்புற கேமராக்களின் விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது, இந்திய சந்தையில் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் விலை 40,000 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பட்ஜெட் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனால் தரமான போன்.. அறிமுகமான Vivo V40 SE - உத்தேச விலை மற்றும் ஸ்பெக் இதோ!

click me!