தொலைத்தொடர்பு துறை பெயரை பயன்படுத்தும் இந்த சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களின் எண்கள் துண்டிக்கப்படும் என்றும் அவர்களின் எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் என்றும் அச்சுறுத்துகின்றனர்.
தொலைத்தொடர்புத்துறை சார்பில் வரும் போலியான வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. தொலைத்தொடர்பு துறை பெயரில் வரும் இந்த அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தொலைத்தொடர்பு துறை பெயரை பயன்படுத்தும் இந்த சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களின் எண்கள் துண்டிக்கப்படும் என்றும் அவர்களின் எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் என்றும் அச்சுறுத்துகின்றனர்.
+92-xxxxxxxxxx போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளில் அரசாங்க அதிகாரிகளைப் போல பேசி மக்களை ஏமாற்றுவது குறித்தும் தொலைத்தொடர்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்! ஓநாய் குழுவுக்குப் போட்ட உத்தரவு!
மோசடி செய்பவர்கள் இந்த அழைப்புகள் மூலம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். தொலைத்தொடர்புத் துறை தனது சார்பாக இதுபோன்ற அழைப்புகளைச் செய்ய யாரையும் அங்கீகரிக்கவில்லை எனவும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் விளக்கியுள்ளது.
இதுபோன்ற போலியான போன் கால்கள் வரும்போது அவர்களிடம் எந்தத் தகவலையும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் தொலைத்தொடர்புத்துறை கொண்டுள்ளது.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் குறித்து சஞ்சார் சாத்தி (www.sancharsaathi.gov.in) இணையதளத்தின் மூலம் அதன் புகார் அளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தொலைத்தொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மொபைல் பயனர்கள் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிக்கு ஆளானால், சைபர் கிரைம் அவசர உதவி எண்ணான 1920 க்குத் தொடர்புகொண்டு உதவி பெறலாம். அல்லது www.cybercrime.gov.in மூலம் என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
இன்ஸ்டாகிராமில் புதுசா வந்த வானிஷ் மோட்! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுகோங்க!