இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல பேஸ்புக்கில் புதிய வீடியோ பிளேயர் அப்டேட்!

By SG Balan  |  First Published Apr 5, 2024, 12:42 AM IST

பயனர்கள் பேஸ்புக்கில் வீடியோக்களைப் பார்ப்பது அதிகமாக இருப்பதால், வீடியோ வசதியை அதிகரிப்பதன் மூலம் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்கலாம் என்று மெட்டா நிறுவனம் கருதுகிறது.


பேஸ்புக் நிறுவனம் புதிய ஃபுல் ஸ்கீரீன் வீடியோ பிளேயரை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, வரவிருக்கும் புதிய வீடியோ பிளேயர் அப்டேட் மூலம் குறுகிய மற்றும் நீண்ட வீடியோக்களுக்கு ஏற்ற வடிவமைப்புடன் அறிமுகப்படுத்த இருக்கிறது என்று கூறப்படுகிறது.

வீடியோ பிளேயர் முதலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிடைக்கும். மற்ற நாடுகளில் பிளேயர் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. வீடியோ பிளேயர் டீஃபால்டாக வெர்டிகல் வியூவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், லேண்ட்ஸ்கேப் வியூவில் முழு திரையில் வீடியோவைப் பார்க்கும் வாய்ப்பும் இருக்கும்.

Tap to resize

Latest Videos

பேஸ்புக் பயனர்களுக்கு அடுத்து பார்ப்பதற்கு மிகவும் பொருத்தமான வீடியோக்களை பரிந்துரைக்கும் அம்சமும் இருக்கும். பயனர்கள் பேஸ்புக்கில் வீடியோக்களைப் பார்ப்பது அதிகமாக இருப்பதால், வீடியோ வசதியை அதிகரிப்பதன் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்கலாம் என்று மெட்டா நிறுவனம் கருதுகிறது.

ஆப்பிள் ஐபோன், ஐபேட், மேக்புக் பயனர்களுக்கு 'ஹை-ரிஸ்க்' எச்சரிக்கை கொடுக்கும் மத்திய அரசு!

வீடியோ பிளேயரில் இடையிடையே இடம்பெறும் விளம்பரங்களும் இருக்கும் என்று தெரிகிறது. வீடியோ பிளேயர் வசதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பேஸ்புக் யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களுடன் போட்டியிட ரெடியாகி இருக்கிறது என்று கூறப்படுகிறது. யூடியூப் மற்றும் டிக்டாக் இரண்டும் அல்காரிதம் அடிப்படையில் இயங்கி வருகின்றன.

டிக்டாக்கின் வெர்டிகல் வீடியோ மற்றும் யூடியூபின் நீளமான வீடியோக்களுடன் போட்டியிடும் நோக்கத்துடன் பேஸ்புக் இந்த முயற்சி இறங்கி இருக்கிறது எனத் தெரிகிறது.

ஃபேஸ்புக் வீடியோ பிளேயர், நீண்ட வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதிகளைத் கடந்து செல்வதற்கான ஸ்லைடர், பாஸ் (Pause) மற்றும் 10 வினாடிகள் பின்னோக்கி அல்லது முன்னோக்கி நகர்வதற்கான வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்விக்கி பெயரைச் சொல்லி ரூ.3 லட்சம் அபேஸ்! கூகுள் சர்ச்சை நம்பி மோசம் போன முதியவர்!

click me!