சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 108MP பிரைமரி கேமரா, 10MP பெரிஸ்கோப் கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், வெளியீடு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம்.
கேமரா விவரங்கள்:
undefined
முன்னதாக வெளியான தகவல்களின் படி கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களை போன்றே இந்த ஸ்மார்ட்போன்களும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் எஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்படும் என்றும் இதற்காக எஸ் பென் ஸ்டைலஸ் உற்பத்தி ஆசியா மற்றும் ஐரோப்பாவில் துவங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 108MP பிரைமரி கேமரா, 10MP பெரிஸ்கோப் கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP 3x டெலிபோட்டோ கேமரா மற்றும் 10MP முன்புற கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 மற்றும் கேலக்ஸி S22 சீரிசில் வழங்கப்பட்ட சென்சார் ஆகும். இத்துடன் புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் அதிக ரெசல்யூஷன் கொண்ட அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதர அம்சங்கள்:
புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதன் வடிவமைப்பு முந்தைய மாடலை விட மிக மெல்லியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.