புதிய நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி, 24x7 இதய துடிப்பு சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.32 இன்ச் 360x360 பிக்சல் ஃபுல் டச் ஃபிளாட் TFT LCD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, கஸ்டமைஸ் மற்றும் கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்களை சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மொத்ததில் ஒன்பது ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங், பெண்கள் உடல்நலனை டிராக் செய்யும் அம்சம், வாய்ஸ் அசிஸ்டண்ஸ் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது, மியூசிக் அம்சத்தை இயக்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை குரல் வழியே செய்திட முடியும். இத்துடன் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஐந்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
நாய்ஸ்ஃபிட் Buzz அம்சங்கள்:
- 1.32 இன்ச் 360x360 பிக்சல் ஃபுல் டச் ஃபிளாட் TFT LCD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- கஸ்டமைஸ் செய்யக்கூடிய, கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்களுக்கான சப்போர்ட்
- ஒன்பது வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- 24x7 இதய துடிப்பு சென்சார்
- SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங்
- பெண்கள் உடல்நலனை டிராக் செய்யும் வசதி
- வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சம்
- IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- ஐந்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப்
புதிய நாய்ஸ்ஃபிட் Buzz மாடல் ஜெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் நாய்ஸ்ஃபிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என நாய்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.