425 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் கியா கார்.... விரைவில் இந்திய வெளியீடு.. விலை எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 21, 2022, 3:51 PM IST

கியா EV6 மாடல் ஐதராபாத் நகரில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.


கியா இந்தியா நிறுவனம் புதிய EV6 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி விட்டது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு மே மாதம் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து கியா EV6 வினியோகமும் தொடங்கும்.

புதிய கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவுக்கு முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களாகவே இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் இந்த கார் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வரும் என தெரிகிறது. மேலும் முதல் ஆண்டிற்கு கியா EV6 மாடல் வெறும் 100 யூனிட்கள் தான் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

Latest Videos

undefined

ஸ்பை படங்கள்:

முன்னதாக கியா EV6 மாடல் ஐதராபாத் நகரில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த மாடல் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்றே கூறப்பட்டது. தற்போது இதன் வெளியீடு பற்றிய தகவலும் கிடைத்துவிட்டது. இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடல் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

செயல்திறன் மற்றும் ரேன்ஜ்:

அம்சங்களை பொருத்தவரை கியா EV6 எலெக்ட்ரிக்  காரில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இது காருக்கு 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் புதிய கியா EV6 மாடல் முழு சார்ஜ் செய்தால் 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.  இதே கார் சற்றே சிறிய, 58 கிலோவாட் ஹவர் பேட்டரியுடனும் கிடைக்கிறது. இந்த மாடல் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

பிளாட்பார்ம்:

ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் குளோபல் e-GMP பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் EV6 மாடல் பிரத்யேக பேட்டரி வாகனத்திற்கான பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். பேட்டரி வாகனங்கள், பிளக் இன் ஹைப்ரிட் மற்றும் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு கியா நிறுவனம் நீண்ட கால திட்டம் தீட்டி இருக்கிறது.

அதன்படி 2030 ஆண்டிற்குள் கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில்  40 சதவீதம் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என கியா இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. மேலும் 2026 ஆண்டிற்குள் மொத்தம் 11 புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய கியா முடிவு செய்துள்ளது.

click me!