மூன்று புது நிறங்கள்... அப்படியே Meteor 350 விலையையும் உயர்த்திய ராயல் என்பீல்டு..!

By Kevin Kaarki  |  First Published Apr 20, 2022, 5:30 PM IST

ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் ஃபயர்பால் வேரியண்ட் புளூ, மேட் கிரீன் நிறங்களிலும், டாப் எண்ட் சூப்பர்நோவா மாடல் புதிய ரெட் நிறத்தில் கிடைக்கிறது. 


ராயல் என்பீல்டு  Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் ராயல்  என்பீல்டு நிறுவனத்தின் 350சிசி குரூயிசர் மோட்டார்சைக்கிள் தற்போது மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் ஃபயர்பால் வேரியண்ட் புளூ, மேட் கிரீன் நிறங்களிலும், டாப் எண்ட் சூப்பர்நோவா மாடல் புதிய ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இவை ஏற்கனவே கிடைக்கும் மற்ற நிற மாடல்களுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

புதிய நிறங்களுடன் Meteor 350 மாடலின் விலையும் இந்திய சந்தையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ராயல் என்பீல்டு Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலின் மூன்று வேரியண்ட்களின் விலையும் தற்போது ரூ. 4 ஆயிரத்து 224 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

Latest Videos

undefined

புதிய விலை விவரங்கள்:

ராயல் என்பீல்டு Meteor 350 ஃபயர்பால் ரூ. 2 லட்சத்து 05 ஆயிரத்து  844
ராயல் என்பீல்டு Meteor 350 ஸ்டெல்லார் ரூ. 2 லட்சத்து 11 ஆயிரத்து 924
ராயல் என்பீல்டு Meteor 350 சூப்பர்நோவா ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 061 

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (சென்னை) அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன. 

மற்ற மாடல்களின் விலை உயர்வு:

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Meteor 350 மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி ஸ்கிராம் 411 மற்றும் ஹிமாலயன் போன்ற மாடல்களின் விலையும் இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் துவங்கியது முதல் ராயல் என்பீல்டு மட்டுமின்றி பலிவேறு இதர நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தி இருக்கின்றன. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதையே பல நிறுவனங்களும் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்து வருகின்றன.

ராயல் என்பீல்டு Meteor 350 அம்சங்கள்:

புதிய ராயல் என்பீல்டு Meteor 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், செமி டிஜிட்டல் கன்சோல், எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் யு.எஸ்.பி. சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Meteor 350 குரூயிசர் மோட்டார்சைக்கிள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைகிறது. 

click me!