
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S22 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெரும் எதிர்பார்க்கு பின் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. உலக நாடுகளில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களை வாங்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பிரீ-புக் செய்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் மாடல்களின் ரிவ்யூ மற்றும் டியர்-டவுன் வீடியோக்கள் யூடியூபில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் iFixit வெளியிட்டு இருக்கும் டியர்-டவுன் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் கேலக்ஸி S சீரிஸ் மாடல்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும், இவற்றில் புதிதாக பிலிப்ஸ் ஸ்கிரூக்கள் வழங்கப்பட்டுள்ளதாக iFixit தெரிவித்து இருக்கிறது.
"இந்த ஸ்கிரூக்களை எளிதில் கழற்றிவிட முடிகிறது. எனினும், பேட்டரி ஒட்டப்பட்டுள்ள பசை மிகவும் உறுதியாக இருப்பதால் அதனை கழற்றுவது கடினமாக இருக்கிறது. இதேபோன்று ஸ்கிரீன் ரிப்பேர்களை சரி செய்வதும் கடினமான காரியம் தான். பேட்டரி மற்றும் ஸ்கிரீன்களை போனில் இருந்து வெளியே எடுப்பது சவால் மிக்க ஒன்றாகவே இருக்கிறது. இந்த சாதனங்களை எளிதில் சரி செய்வதற்கான இலவச சர்வீஸ் மேனுவலை சாம்சங் வெளியிடவில்லை," என iFixit தெரிவித்து இருக்கிறது.
இவைதவிர புதிய கேலக்ஸி S22 அல்ட்ரா மாடலில் எஸ் பென் வைக்க கூடுதலாக ஒரு கனெக்டர் மற்றும் அளவில் பெரிய கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் பில்ட்-இன் லீனியர் வைப்ரேட்டர் உள்ளது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு கிராஃபைட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டிஸ்ப்ளேவின் கீழ் அதிக உறுதியான பசை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 0.4mm ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.