முன்பதிவில் கெத்து காட்டிய கேலக்ஸி எஸ்22 சீரிஸ் - மகிழ்ச்சியில் சாம்சங்

By Kevin Kaarki  |  First Published Feb 24, 2022, 5:07 PM IST

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. 


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவு நேற்று (பிப்ரவரி 23) துவங்கியது. முன்பதிவு துவங்கிய 12 மணி நேரத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. 

முந்தைய கேலக்ஸி எஸ்21 மற்றும்  கேலக்ஸி எஸ்21 பிளஸ் மாடல்களில் பிளாஸ்டிக் பேக் வழங்கியது அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த வகையில், புதிய மாடல்களில் சாம்சங் அதிக கவனம் செலுத்தியது. மேலும் பயனர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்த கேலக்ஸி நோட் சீரிசை இந்த ஆண்டு கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா தோற்றம், எஸ் பென் ஸ்லாட் உள்ளிட்டவை கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனை பிரதிபலிக்கிறது. இத்துடன் முற்றிலும் ஃபிளாக்‌ஷிப் அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. அசத்தலான அம்சங்கள் ஒருபுறமும், கேலக்ஸி நோட் மாடலின் ரி-எண்ட்ரி உள்ளிட்டவை புதிய கேலக்ஸி எஸ்22 சீரிஸ் அமோக வெற்றி பெற காரணிகளாக அமைந்துள்ளன.

இதுமட்டுமின்றி கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 26,999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 ரூ. 2,999 விலைக்கு வழங்குவது, கேலகேஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 11,999 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் 2 ரூ. 999  விலையில் வழங்குவதும் இத்தகைய வரவேற்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  

விலை விவரங்கள் 

சாம்சங் கேலக்ஸி எஸ்22 8GB + 128GB ரூ. 72,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 8GB + 256GB ரூ. 76,999 
சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8GB + 128GB ரூ. 84,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8GB + 256GB ரூ. 88,999 
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அலட்ரா 12GB + 256GB ரூ. 1,09,999 
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அலட்ரா 12GB + 512GB ரூ. 1,18,999 

புதிய கேலலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஃபேண்டம் பிளாக், ஃபேண்டம் வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் பர்கண்டி, ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

click me!