Realme Narzo 50 : அசத்தல் அம்சங்களுடன் நார்சோ 50 மாடலை அறிமுகம் செய்த ரியல்மி

By Kevin Kaarki  |  First Published Feb 24, 2022, 1:12 PM IST

ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது நார்சோ 50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 50MP மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4ஜி கனெக்டிவிட்டி, டூயல் சிம் ஸ்லாட், 5000mAh பேட்டரி மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

ரியல்மி நார்சோ 50 அம்சங்கள்

- 6.6 இன்ச் IPS LCD ஸ்கிரீன் HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர்
-  6 GB of LPDDR4x RAM
- 128GB of UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 50MP பிரைமரி கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 2MP டெப்த் சென்சார்
- 16MP செல்ஃபி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- 5000mAh பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியயல்மி நார்சோ 50 மாடல்  4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும்  6GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் ஸ்பீடு புளூ மற்றும் ஸ்பீடு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை  மார்ச் 3 ஆம் தேதி அமேசான் மற்றும் ரியல்மி வலைதளங்களில் நடைபெறுகிறது.

click me!