பீட்டாவில் சிக்கிய புது அம்சம் - விரைவில் வாட்ஸ்அப்-இல் Message Reaction செய்யலாம்

By Kevin KaarkiFirst Published Feb 24, 2022, 4:06 PM IST
Highlights

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் மெசேஜ் ரியாக்‌ஷன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இது வெளியிடப்படலாம்.

வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன் அம்சம் வழங்கப்பட இருப்பது, அதன் டெஸ்க்டாப் பீட்டா தளத்தில் தெரியவந்துள்ளது. மெசேஜ் ரியாக்‌ஷன் என்பது வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்வது ஆகும். ஏற்கனவே இதே போன்ற அம்சம் பல்வேறு குறுந்தகவல் செயலிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதுதவிர புதிதாக ஸ்டேட்டஸ் வைக்கும் போது யார் யார் அதனை பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஷார்ட்கட் வழங்கப்படுகிறது. இரு புதிய அம்சங்கள் தற்போது பீட்டா தளத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை எப்போது அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

டெஸ்க்டாப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன் வசதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன. இந்த அம்சம் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் உருவாக்கப்படுதாகர 2021 ஆகஸ்ட் மாத வாக்கில் தகவல் வெளியானது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களுக்கும் உருவாக்கப்பட்டு வருகிறது.

மெசேஜ் ரியாக்‌ஷன் அம்சத்திற்கான பட்டன் எமோஜி ஐகான் வடிவில் மெசேஜ் அருகில் காணப்படுகிறது. மெசேஜின் மீது கர்சரை கொண்டு செல்லும் போது மட்டுமே இந்த ஐகான் தெரியும். அதனை கிளிக் செய்ததும், ஆறு எமோஜிக்கள் தெரியும். அவற்றில் ஒன்றை குறிப்பிட்ட மெசேஜிற்கு அனுப்ப முடியும். இன்ஸ்டாகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளில் எவ்வித எமோஜி கொண்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதால், இந்த அம்சங்களை உருவாக்கும் பணிகள் முழுமை பெறவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக இவற்றை பயன்படுத்த பயனர்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும். இரு அம்சங்கள் பற்றிய அறிவிப்பை வாட்ஸ்அப் இதுவரை வெளியிடவில்லை.

click me!