சாம்சங் போனிற்கு அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jun 29, 2022, 10:05 PM IST

சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இருவத ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. 

இதையும் படியுங்கள்: அசத்தல் அம்சங்கள், ஸ்டைலிஷ் டிசைன்.. மிட் ரேன்ஜ் பிரிவில் புது நோக்கியா போன் அறிமுகம்..!

Tap to resize

Latest Videos

undefined

புதிய விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி M32 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி M32 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்: இனி அந்த கவலை வேண்டாம்... விரைவில் வாட்ஸ்அப் வரும் புது அம்சம்...!

சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 20MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: மிகக் குறைந்த விலையில் சாம்சங் போல்டபில் போன்... இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்..!

கனெக்டிவிட்டிக்கு சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போன் மாடலில் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போன் மாடல் 6000mAh பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.  

சாம்சங் கேலக்ஸி M32 அம்சங்கள்:

- 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
-  6GB ரேம்
- 128GB மெமரி 
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ லென்ஸ்
- 2MP டெப்த் கேமரா
- 20MP செல்பி கேமரா
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
- 6000mAh பேட்டரி 
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

click me!