Samsung Galaxy F23 5G: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மாரட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் கேலக்ஸி F சீரிஸ் மாடல்களில் இதுவரை வழங்கப்படாத இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேமிங் மற்றும் ஸ்டிரீமிங் போன்ற சேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என சாம்சங் தெரிவித்து இருக்கிறது.
undefined
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடல் வெளியீடு குறித்து ப்ளிப்கார்ட் மைக்ரோசைட் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளங்களில் சிறப்பு வலைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் FHD, இன்ஃபினிட்டி வி ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடலின் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- FHD 120Hz டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- 6GB ரேம்
- ஆண்ட்ராய்டு 12
- 48MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 5MP டெலிபோட்டோ கேமரா
- 16MP செல்ஃபி கேமரா
- 6000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்