iPhone 11 Offer: ஐபோனிற்கு ரூ. 17,800 தள்ளுபடி - ப்ளிப்கார்ட் அதிரடி

By Kevin Kaarki  |  First Published Mar 3, 2022, 5:19 PM IST

iPhone 11 Offer: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடலுக்கு அசத்தலான சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். 


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. எனினும், ஆன்லைன் வலைதளங்களில் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 11 மாடலுக்கு ரூ. 11 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி மார்ச் 5 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

இந்த சலுகை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 11 (64GB) மாடல் விலை ரூ. 49,900 என்றும் ஐபோன் 11 (128GB) விலை ரூ. 54,900 என்றும் நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களுக்கும் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 17,800 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில் இவற்றின் விலை முறையே ரூ.32,100 மற்றும் ரூ. 37,100 என மாறி விடும். எனினும், இது எக்சேன்ஜ் சலுகை ஆகும். அந்த வகையில் பயனர்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சமாக ரூ. 17,800 வரை தள்ளுபடி பெற முடியும். பயனர் எக்சேன்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ப தள்ளுபடி விலையில் மாற்றம் செய்யப்படும்.  

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே, ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது கேமரா என டூயல் கேமரா லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

அடுத்த வாரம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் SE 5ஜி வேரியண்டை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் SE வெளியீட்டை தொடர்ந்து தற்போது விற்பனையாகி வரும் ஐபோன் SE விலையும் குறைக்கப்படலாம் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!