Realme Narzo 50 : ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50 ஸ்மார்ட்போன் முதல் விற்பனை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு துவங்கியது. இதன் விற்பனை அமேசான், ரியல்மி வலைதளம் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 50 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000mAh பேட்டரி, சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.
ரியயல்மி நார்சோ 50 மாடல் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் ஸ்பீடு புளூ மற்றும் ஸ்பீடு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 50 அம்சங்கள்
- 6.6 இன்ச் IPS LCD ஸ்கிரீன் HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர்
- 6 GB of LPDDR4x RAM
- 128GB of UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 50MP பிரைமரி கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 2MP டெப்த் சென்சார்
- 16MP செல்ஃபி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- 5000mAh பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்