Redmi Watch 2 Lite: சியோமி நிறுவனம் தனது ரெட்மி வாட்ச் 2 லைட் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி வாட்ச் 2 லைட் மாடலின் இந்திய வெளியீடு மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புதிய அணியக்கூடிய சாதனம் ஆகும். புது ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பு ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய ரெட்மி வாட்ச் 2 லைட் அறிமுக நிகழ்வு யூடியூபில் நேரலை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் டிசம்பர் 2021 வாக்கில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஜெர்மனியில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதில் 1.55 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 360x320 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது.
இத்துடன் அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் உள்ளதை போன்றே இதிலும் இதய துடிப்பு சென்சார் உள்பட பல்வேறு இதர சென்சார்கள் உள்ளன. மேலும் நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட் மோட்கள், ஜி.பி.எஸ்., 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 262mAh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் பெற முடியும்.
ரெட்மி வாட்ச் 2 லைட் விலை 79 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.