Mivi earphone: மிவி நிறுவனத்தின் இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
ஐதராபாத் நகரை சேர்ந்த நிறுவனமான மிவி இந்திய சந்தையில் இரண்டு புதிய ப்ளூடூத் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இரு இயர்போன்களும் மிவி தண்டர்பீட்ஸ் 2 மற்றும் கான்கொயர் எக்ஸ் என அழைக்கப்படுகின்றன. தண்டர்பீட்ஸ் 2 அமேசான் தளத்திலும், கான்கொயர் எக்ஸ் மாடல் ப்ளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களே உள்ளன. இரு நெக்பேண்ட்களும் 10mm சூப்பர் சாலிட் பேஸ் மற்றும் தெளிவான ஆடியோ டிரைவர்களை கொண்டிருக்கின்றன. இவை தனித்துவம் மிக்க ஆடியோ அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகின்றன.
முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன்கள் 14 மணி நேரத்திற்கான பிளேடேம் வழங்குகின்றன. இத்துடன் ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, இன்-பில்டு மைக்ரோபோன், IPX4 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற இன்-பில்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள், ஃபாஸ்ட் சார்ஜிங், பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்களை தெரியப்படுத்த எல்.இ.டி. இண்டிகேட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
மிவி தண்டர்பீட்ஸ் 2 மற்றும் கான்கொயர் எக்ஸ் சிறப்பம்சங்கள்
- 10mm சாலிட் பேஸ் மற்றும் தெளிவான ஆடியோ டிரைவர்கள்
- ப்ளூடூத் 5 மற்றும் 10mm ரேன்ஜ்
- ஆடியோ கோடெக்: AVRCP, A2DP, HSP, HFP
- கண்ட்ரோல்கள்: பவர் ஆன்/ஆஃப், வால்யூம், மியூசிக், வாய்ஸ் அசிஸ்டண்ட்
- 23 கிராம் எடை, 10 x 1 x 4 Cm டைமென்ஷன்
- 126mAh பேட்டரி
- 14 மணி நேர பிளே டைம்
மிவி தண்டர்பீட்ஸ் 2 மற்றும் கான்கொயர் எக்ஸ் மாடல்கள் கிரீன், கிரே, பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 999 ஆகும். எனினும், இரு மாடல்களும் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விற்பனை மிவி வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகின்றன.