வந்துவிட்டது Samsung Galaxy F04.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

By Dinesh TG  |  First Published Jan 5, 2023, 12:34 PM IST

Samsung Galaxy F04 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை இங்கு காணலாம்.


பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் சாம்சங் நிறுவனம் தற்போது புதிதாக Samsung Galaxy F04 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஜேட் பர்பிள் மற்றும் ஓபல் க்ரீன் என இரண்டு வண்ண நிறங்களில் இவை வந்துள்ளன.​ ​இதில் 16.55cm HD+ டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன், ஸ்லிம் பெசல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, MediaTek P35 பிராசசர், 8GB வரை விரிவாக்கம் செய்யக்கூடிய ரேம், ஆண்ட்ராய்டு 12, இரண்டு வருட OS அப்டேட் ஆகியவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கேமராவைப் பொறுத்தவரையில் 2 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் என டூயல் கேமரா உள்ளன. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 5000mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜ் உள்ளதா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

Chrome Update: இந்த 2023 ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்களில் Google Chrome சேவை நிறுத்தம்!

சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும், அதன் மலிவு விலையில் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. பின்புற பேனலில், ஃபோனில் இரட்டை கேமராக்கள் உள்ளன, ஆனால் கேமராக்கு என்று கட்டம் எதுவும் இல்லை. லேசான பிரீமியம் தோற்றத்தில் .ள்ளது. கேமரா அமைப்பில் LED ஃபிளாஷ் உள்ளது. 

இந்த  Samsung Galaxy F04 ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 12 ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் கிடைக்கும். 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்டாக அறிமுகமாகியுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.7499 ஆகும். பிளிப்கார்டில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Samsung Galaxy S23 சீரிஸை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கும். Galaxy Unpacked 2023க்கான அதிகாரப்பூர்வ தேதியை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!