Samsung Galaxy A13: சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி A13 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A13 ஸ்மார்ட்போன் சமீபத்தில் கேல்கஸி A23 மற்றும் கேலக்ஸி M33 ஸ்மார்ட்போன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு பற்றி சாம்சங் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி A13 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி A13 ஸ்மார்ட்போன் மூன்று விதமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் புதிய சாம்சங் கேலக்ஸி A13 பேஸ் மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி A13 அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி A13 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் TFT இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, சாம்சங் எக்சைனோஸ் 850 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ மற்றும் 2MP டெப்த் கேமரா லென்ஸ்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி A13 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், நாக்ஸ் செக்யூரிட்டி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி A13 விலை விவரங்கள்:
சாம்சங் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி A13 ஸ்மார்ட்போன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ.14 ஆயிரத்து 999 என்றும் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் புதிய சாம்சங் கேலக்ஸி A13 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, பீச் மற்றும் வைட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.