Poco X4 Pro 5G: புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை சூசகமாக அறிவித்த போக்கோ..!

By Kevin KaarkiFirst Published Mar 22, 2022, 12:32 PM IST
Highlights

Poco X4 Pro 5G: தற்போது புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிற்கான வெளியீட்டு தேதி அடங்கிய டீசரை போக்கோ வெளியிட்டு உள்ளது.

போக்கோ நிறுவனத்தின் புதிய X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. சர்வதேச சந்தையில் புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 

சில நாட்களுக்கு முன் வெளியான தகவல்களில் போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் 64MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டதகு. தற்போது புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை போக்கோ வெளியிட்டு உள்ளது. டீசரின் படி புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

The X has a date! Let's know if you're able to find it.

Watch this space tomorrow. pic.twitter.com/pSZkDKyaEZ

— POCO India (@IndiaPOCO)

 

மேலும் புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்- லேசர் புளூ, போக்கோ எல்லோ மற்றும் லேசர் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இதன் சர்வதேச மாடல்களின் விலை 299 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 25 ஆயிரத்து 500 என துவங்குகிறது. இதன் இந்திய விலையும் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிலேயே நிர்ணயம் செய்யப்படலாம்.

அம்சங்களை பொருத்த வரை புதிய போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லாகிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அட்ரினோ 619 GPU, 8GB ரேம், 256GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13 ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8Mஜ அல்ட்ரா வைடு கேமரா,  2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. போக்கோ X4 ப்ரோ 5ஜி மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி மற்றும் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், IR பிளாஸ்டர், 3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகின்றன. புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சர்வதேச வேரியண்டில் உள்ள அம்சங்களை அப்படியே கொண்டிருக்குமா அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முதற்கட்டமாக வெளியீட்டு தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், போக்கோ X4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் படிப்படியாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

click me!