realme GT Neo3: ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ரியல்மி GT நியோ 3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ரியல்மி GT நியோ 3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வி.சி. லிக்விட் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4500mAh மற்றும் 5000mAh என இருவித பேட்டரி ஆப்ஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இதன் 4500mAh பேட்டரி வேரியண்டில் முதல் முறையாக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 15 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள 5000mAh பேட்டரி மாடலுடன் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
undefined
ரியல்மி GT நியோ 3 அம்சங்கள்:
- 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர்
- மாலி-G510 MC6 GPU
- 6GB / 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 8GB / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம்
- 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88,
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4500mAh பேட்டரி, 150 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய ரியல்மி GT நியோ 3 மாடலின் 6GB ரேம், 128GB மாடல் விலை 1999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 975 என்றும், 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை 2299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 27 ஆயிரத்து 600 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை 2599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
150 வாட் சார்ஜிங் கொண்ட ரிய்லமி GT நியோ 3 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை 2599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 200 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை 2799 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 600 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.