சாம்சங் அறிவித்துள்ள தகுதியான ஸ்மார்ட்போன்களில் கிரீன் லைன் பிரச்னை இருந்தால் வரும் 30ஆம் தேதிக்குள் அருகில் உள்ள சாம்சங் சர்வீஸ் சென்டருக்கு சென்று கட்டணம் இல்லாமல் சரிசெய்து கொள்ளலாம்.
உங்களிடம் Samsung Galaxy S சீரிஸ் மொபைல் போன் உள்ளதா? அதில் பச்சை நிறத்தில் கோடு கோடாகத் தெரியும் பிரச்சனை இருக்கிறதா? அப்படியாடால் நீங்கள் கவலையே பட வேண்டாம். சாம்சங் அதற்கு ஒரு தீர்வு அறிவித்து இருகிகறது.
சாம்சங் இந்த கிரீன் லைன் (Green line) பிரச்சினை உள்ள சில கேலக்ஸி S சீரிஸ் போன்களுக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது. கேலக்ஸி S20 சீரிஸ், கேலக்ஸி S21 சீரிஸ் மற்றும் S22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு முறை இலவசமாக ஸ்கிரீனை மாற்றித் தருவதாக சாம்சங் கூறியுள்ளளது.
undefined
சமீப காலமாக சாம்சங் போன்களின் திரையில் பச்சைக் கோடு தோன்றுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன என்று சாம்சங் குறிப்பிட்டுள்ளது. கேலக்ஸி எஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களிலும் இந்தச் சிக்கல் உள்ளது. சாப்ட்வேர் அப்டேட் மூலம் பிரச்சினை வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் கார்டே தேவை இல்ல... UPI பேமெண்டுக்கு ஆதார், போன் நம்பர் மட்டும் போதும்!
இந்தச் சிக்கலை சரிசெய்ய சாம்சங் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக்கொடுக்க முன்வந்துள்ளது. தகுதியான சாம்சாங் மொபைலில் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக்கொள்ள, சில நிபந்தனைகளும் உள்ளன. அதற்கு உட்பட்டுதான் ஸ்கிரீன் மாற்றம் செய்ய முடியும்.
மொபைல் வாங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மற்றும் எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியும். மொபைல் கீழே விழுந்து சேதம் அடைந்திருந்தாலோ, தண்ணீரால் பாதிக்கப்பட்டிருந்தாலோ இலவச ஸ்கிரீன் மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
எனவே, சாம்சங் அறிவித்துள்ள தகுதியான ஸ்மார்ட்போன்களில் கிரீன் லைன் பிரச்னை இருந்தால் வரும் 30ஆம் தேதிக்குள் அருகில் உள்ள சாம்சங் சர்வீஸ் சென்டருக்கு சென்று கட்டணம் இல்லாமல் சரிசெய்து கொள்ளலாம். சாம்சங் குறிப்பிட்டுள்ள மாடல்கள் தவிர, இன்னும் பல போன்களிலும் இதே பிரச்சினை உள்ளது. ஆனால், அந்த போன்களில் கிரீன் லைன் பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் என தகவல் ஏதும் கொடுக்கப்படவில்லை.
புதுச்சேரி, காரைக்காலில் மதுபானக் கடைகள் இரவு 11 மணிவரை இயங்க அனுமதி!