
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தனது எக்ஸ் பதிவில், ''OpenAI உடனான வர்த்தக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது திட்டத்தில், செயல்பாடுகளில் எதிர்கால திட்டங்களில் நம்பிக்கை கொண்டுள்ளோம். Microsoft Ignite ல் நாங்கள் அறிவித்த அனைத்தையும் தொடர்ந்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவோம். எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்.
சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் இருவரும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து புதிய மேம்பட்ட AIஐ வழி நடத்துவார்கள் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களது வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் விரைவில் வழங்க இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த புதிய குழுவின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக நீங்கள் சேர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புதுமைக்கான புதிய வேகத்தை, பாதையை சாம் அமைத்துள்ளார். கிட்ஹப், மொஜாங் ஸ்டுடியோஸ் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்குள் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் கலாச்சாரங்களை உருவாக்க நிறுவனர்களுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் இடம் கொடுப்பது பற்றி பல ஆண்டுகளாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்'' என்று சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
OpenAI இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மீரா முராட்டி நியமனம்; யார் இவர்?
OpenAI நிறுவனர்களில் ஒருவர்தான் சாம் ஆல்ட்மேன். தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இவரை கடந்த வாரம் அந்த நிறுவனம் வெளியே அனுப்பியது. இது டெக் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மேலும் ஒரு நிறுவனருமான ப்ரோக்மேன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பணியில் அமர்த்திய சத்யா நாதெல்லா, இவர்களுக்கு ஆதரவாக OpenAI-ல் இருந்து வெளியேறியவர்களுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கையைச் சுடும் ஐபோன் 15! ஹீட்டிங் பிரச்சினையை சரிசெய்யப் போராடும் ஆப்பிள் நிறுவனம்!
OpenAI நவம்பர் 18 அன்று வெளியிட்டு இருந்த பதிவில், ஆல்ட்மேன் வெளியேறியதாக தெரிவித்து இருந்தது. அவர் நிறுவனத்தின் தகவல் தொடர்புகளுக்கு முரணாக செயல்படுவதாகவும், எனவே நிறுவனத்தை வழிநடத்தும் அவரது திறனில் குழுவிற்கு நம்பிக்கை இல்லை என்றும் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.