கடந்த சில நாட்களாக அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் 500 நிர்வாகிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டவர்களை ராஜினாமா செய்யும்படி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனமான ஜியோ மார்ட் 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, சமீபத்தில் தனது செயல்பாடுகளை சீரமைக்க முனைந்துள்ளதால், நிறுவனத்தில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
“கடந்த சில நாட்களாக அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் 500 நிர்வாகிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டவர்களை ராஜினாமா செய்யும்படி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஏற்கனவே செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தை (பிஐபி) வைத்துள்ள நிலையில், மற்றொரு பெரிய அளவிலான பணிநீக்கங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது” என அதிகாரி தெரிவித்தார். ரிலையன்ஸ் ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு ஊதியத்தையும் குறைத்தும் இருப்பதாக அவர் கூறினார்.
PM KISAN YOJANA: கணவனும் மனைவியும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ ரூ.6000 பெற முடியுமா?
பெரிய செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. மொத்த விற்பனைப் பிரிவில் உள்ள 15,000 பணியாளர்களை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பதும் இதில் அடங்கும். மேலும் ஜியோ மார்ட் நிறுவனம் அதன் 150 விநியோக மையங்களை மூடவும் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில், ஜெர்மன் சில்லறை விற்பனையாளரான மெட்ரோ ஏஜி இந்தியாவில் உள்ள தனது 31 கடைகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திற்கு ரூ.2,850 கோடிக்கு விற்பனை செய்வதாக அறிவித்தது. இதனையொட்டி, ஜியோ மார்ட் நிறுவனம் நஷ்டத்தைக் குறைப்பதிலும் வருவாயைப் பெருக்குவதிலும் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
"ஜியோமார்ட் ரிலையன்ஸ் ரீடெய்ல் மளிகைக் கடைகள் மற்றும் விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பு நெட்வொர்க்கைப் சிறப்பாக பயன்படுத்துகிறது. மற்ற விநியோகஸ்தர்களுடன் ஒப்பிடும்போது இது குறைந்த விலையையும், சிறந்த சேவை நிலையையும் வழங்குகிறது" என அந்நிறுவன அறிக்கை ஒன்று கூறுகிறது.
10 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் சார்ஜ்! முதல் நாளே விற்று தீர்ந்த Motorola Edge 40 Pro - எப்படி இருக்கு?